நாடாளுமன்ற கூட்டத்தொடர்: பிஜு  ஜனதா தளம் வெளிநடப்பு!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 11:53 am
biju-janata-dal-party-walks-out-of-lok-sabha

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பிக்கள்  வெளிநடப்பு செய்துள்ளனர். 

இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ். தெலுங்கு தேசம் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் நம்பிக்கையில்லா  தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசி வருகிறார். இந்த நிலையில் ஒடிசா மாநில கட்சியான பிஜு ஜனதா தள  கட்சி எம்.பிக்கள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்திற்கு பா.ஜ.க அரசு எதுவும் நன்மை செய்யவில்லை என்று கூறி அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close