நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 12:31 pm

shiv-sena-mps-will-abstain-from-voting-won-t-attend-lok-sabha-today

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலாவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா பேசி வருகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவாதம் தொடங்கும் நேரத்திலே அவையை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பிக்கள்  வெளிநடப்பு செய்துள்ளனர்.

மேலும் இந்த விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.  பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக தான் வாக்களிப்போம் என கூறியிருந்தது. ஆனால் இன்று அவை விவாதத்தில் கூட சிவசேனா கலந்துகொள்ளவில்லை.  பிஜு ஜனதா தளம் வெளிநடப்பு, சிவசேனா புறக்கணிப்பு ஆகியவை பா.ஜ.கவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close