ரூ.15 லட்சம் எங்கே? - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 01:39 pm
rahul-gandhi-asks-about-rs-15-lakhs-in-parliament-session

இந்திய மக்கள் ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்பட்டதா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற அவையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலாவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா பேசி வருகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார். அவர், "இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இப்போது ஆட்சி முடியப்போகிறது. 15 லட்சம் ரூபாய் எங்கே? அதேபோல் 2 கோடி வேலைவாய்ப்புகள்உருவாக்கப்படும் என்று கூறினாரே அவை எங்கே?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறி வருகிறார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் கூறுவது உண்மையல்ல" என்றார். இதற்கு நிர்மலா ஸீதாராமன்  எழுந்து நின்று எதிர்ப்பை தெரிவித்தார்.

இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close