பிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 01:49 pm
rahul-gandhi-speech-in-parliament

 நாடாளுமன்ற அவையில் பிரதமர் என் கண்ணை பார்த்து பேச மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில், பேசிய ராகுல் காந்தி, "இந்திய மக்கள் ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்பட்டதா?, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா? இவ்வாறு பொய்யான வாக்குறுதிகளை கூறி பா.ஜ.க அரசு மக்களை ஏமாற்றியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் மக்கள் பெரிதும் பாதிக்கபட்டனர். உலகம் முழுவதும் பெட்ரோல் விலைகுறைந்து கொண்டிருக்கையில், இந்தியாவில் மட்டும் விலை ஏறுகிறது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்.

பிரதமர் மோடியால் என் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேச முடியவில்லை. இதிலிருந்து அவர் உண்மையாக இல்லை என தெரிகிறது. நான் அவரை புன்னகையுடன் பார்க்கிறேன். ஆனால் அவரது பார்வையில் பதற்றம் தெரிகிறது. என் கண்ணை பார்த்து பேசுவதை அவர் தவிர்க்கிறார்" என்றார்.

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close