கட்டியணைத்த ராகுல்! பதிலுக்கு கைகொடுத்தார் மோடி!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 02:21 pm
rahul-gandhi-hugs-pm-modi-in-parliament

நாடாளுமன்ற அவையில் பேசி முடித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டியணைத்து விட்டு சென்றார். பதிலுக்கு பிரதமரும் கைகொடுத்தார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டதன் பேரில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

முதலாவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா பேசி வருகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவாதம் தொடங்கும் நேரத்திலே அவையை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பிக்கள்  வெளிநடப்பு செய்துள்ளனர். மேலும், சிவசேனா கட்சி எம்.பிக்கள் அவைக்கு வரவில்லை. 

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். பா.ஜ.க அரசையும், மோடியையும் விமர்சித்து பேசினார். பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என பேசினார். அவ்வாறு பேசும் போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே ராகுல், "கொஞ்சம் அமைதியாக இருங்கள். எனது பேச்சை நீங்கள் ரசிப்பீர்கள். சந்தோசமாக கேட்பீர்கள். நான் நன்றாக பேசுகிறேன் என பாஜக உறுப்பினர்களே கூறியுள்ளனர்" என பேசினார். 

இறுதியில், 'பிரதமர் மோடி ஒரு வித்தியாசமான அரசியல்வாதி' என்று கூறி உரையை முடித்தார். உரை முடித்த கையோடு, பிரதமரின் இருப்பிடத்திற்கு சென்று அவரை கட்டித்தழுவினார் ராகுல். பதிலுக்கு பிரதமர் மோடியும் கை கொடுத்தார். இந்த நேரத்தில் அவையில் அனைவரும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close