மாற்றாந்தாயாக மத்திய அரசு - அ.தி.மு.க எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Jul, 2018 05:45 pm
admk-mp-venugopal-accusation

தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துவதாக அ.தி.மு.க எம்.பி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்படும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் தொடங்கியது. 

விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க எம்.பி வேணுகோபால், “காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்ததற்கு நன்றி. இதேபோல் காவிரியில் கர்நாடகா முறையாக நீரை திறந்துவிட ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். யூஜிசி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதனை கலைக்க வேண்டிய அவசியமில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது, ஆட்சி குறித்து மக்களே முடிவு எடுப்பர். தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவை தொகையை விரைவில் வழங்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மக்கள் நம்பிக்கை இழப்பர். மாற்றாந்தாயாக மாறிவிட்டது என்றே கருதுவார்கள்” எனப் பேசினார்.

அதேநேரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த, அ.தி.மு.க எம்.பி மைத்ரேயன்,  "காங்கிரஸ், தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கும்" என்றார். முட்டை தி.மு.க என்று எதிர்கட்சிகள் கிண்டலடித்து வரும் நேரத்தில், மக்களவையில் ஒரு எம்.பி கூட வைத்திருக்காத தி.மு.க ஆதரவு தெரிவித்தது என்பதற்காக அதை எதிர்ப்போம் என்று மைத்ரேயன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close