மக்களின் தீர்ப்பை எதிர்த்து ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’!- ராஜ்நாத் சிங்

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Jul, 2018 08:01 pm

rajnath-singh-s-statement-in-lok-sabha

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போன்று உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம், அதனால் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவில்லை. தற்போது பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மக்களின் தீர்ப்பை எதிர்ப்பது போல் உள்ளது’ என பேசினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close