குழந்தை போல நடந்து கொள்ளாதீர்கள் - ராகுலுக்கு மோடி பதிலடி

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 04:17 am
modi-blasts-rahul-gandhi-s-childish-antics

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, தன்னை காலையில் கட்டியணைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். 

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார் ராகுல். மக்களின் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அரசை ராகுல் விமர்சித்தார். மேலும் தனது கண்ணை பார்த்து மோடியால் பேச முடியாது என்றும் ராகுல் கூறினார். பின்னர், பிரதமர் இருக்கைக்கு அருகே சென்று, அவரை கட்டியணைத்து, அவர் மேல் தனக்கு அன்பு மட்டுமே உண்டு என்றார் ராகுல். மோடியும் அப்போது திரும்பச் சென்ற ராகுலை மீண்டும் அழைத்து பேசி, தட்டிக் கொடுத்தார். 

அதன்பின் ராகுல், தனது இருக்கையில் அமர்ந்து, மற்றொரு எம்.பி-யை பார்த்து கண்ணடித்தார். இது ஊடங்கங்களில் வைரலாக பரவியது.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய பிரதமர் மோடி, ராகுலுக்கு கடும் பதிலடி கொடுத்தார். "காலையில், வாக்கெடுப்பு முடியவில்லை. விவாதம் முடியவில்லை. ஆனால் ஒரு உறுப்பினர் என்னை நோக்கி ஓடி வந்து எழுந்திரு, எழுந்திரு, எழுந்திரு என்கிறார். பிரதமர் பதவிக்கு வர எதற்கு இந்த அவசரம். நாம் நினைத்தால் இந்த பதவிக்கு வந்துவிட முடியாது. மக்கள் தான் நம்மை இங்கு அமர வைக்கிறார்கள்" என்றார். மேலும், ராகுல் தன்னை கட்டியணைத்ததை, 'குழந்தைத்தனமான சேஷ்டைகள்' என மோடி விமர்சித்தார். ராகுல் கண்ணடித்ததை உலகமே பார்த்தது என்றார் மோடி.

மேலும், ரஃபேல் ஜெட் ஒப்பந்தத்தை பற்றி ராகுல் காந்தி பொறுப்பில்லாமல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதால், இரு நாடுகளும் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் மோடி கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close