நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி; பா.ஜ.க பாஸ்!

  Newstm News Desk   | Last Modified : 21 Jul, 2018 05:07 am

tdp-s-no-confidence-motion-defeated-in-lok-sabha

மத்திய அரசுக்கு எதிராக ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், நாடாளுமன்றத்தின் மக்களவையில் தோல்வியடைந்தது. 

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், இந்த தீர்மானம் இன்று மக்களவை சபைக்கு கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது.  விறுவிறுப்பாக நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தன. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தது; அவரை கட்டியணைத்தது; உள்ளிட்ட பல்வேறு ருசீகரமான சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி என சுமார் 12 மணி நேரத்திற்கு விவாதங்கள் நடைபெற்றன. பிஜு ஜனதா தளம் மற்றும் மற்றும் சிவ சேனாவை தவிர மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வெறும் 126 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசுக்கு ஆதரவாக 325 ஓட்டுக்கள் அதாவது 3ல் இரண்டு ஓங்கு வாக்குகள் கிடைத்தன. இதனால், பெருவாரியான வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

Advertisement:
[X] Close