மோடி சிறந்த நடிகராக வருவார்- எம்பி சீனிவாஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jul, 2018 11:46 am
pm-modi-best-actor-in-world-tdp-lawmaker

வருங்காலத்தில் பிரதமர் மோடி சிறந்த நடிகராக வருவார் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி சீனிவாஸ் விமர்சித்துள்ளார். 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் கூறி மத்திய அரசு மீது தெலுங்கு தேசக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நேற்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது பா.ஜ.க மீது பல்வேறு கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி சுமார் ஒன்றரை மணி நேரம் பதிலளித்தார். 

இந்நிலையில் பிரதமர் உரையை முடித்தவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி கேசனேனி சீனிவாஸ், பிரதமர் ஒன்றரை மணி நேரம் பேசியதை பார்க்கும் போது பாலிவுட் படம் பார்த்தது போல் இருந்தது. கடந்த ஒன்றரை மணிநேரம் நன்றாக நடித்துள்ளார். வருங்காலத்தில் உலகிலேயே பிரதமர் மோடி சிறந்த நடிகராக வருவார் என கூறினார். கேசனேனி சீனிவாஸின் இந்த பேச்சு பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close