அரசியலில் பட்டம் பெற்று விட்டார் ராகுல் காந்தி: சிவசேனா பாராட்டு!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 10:31 am
shiv-sena-praises-rahul-gandhi-says-his-hug-was

நேற்று மக்களவையில் ராகுல் பேசியது மற்றும் நடந்துகொண்டதன் மூலம் அவர் அரசியல் பள்ளிக்கூடத்தில் பட்டம் பெற்று விட்டார் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களைவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. விவாதத்தை தொடங்கி வைக்க, அடுத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.  இதுவரை அவரை 'பப்பு' என்று கூறியவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமல்லாமல், அவருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

"பிரதமர் என்னை பார்த்து பேச பயப்படுகிறார். அவரது முகத்தின் புன்னகை தெரிந்தாலும், உள்ளே ஒரு பதற்றம் தெரிகிறது" என்றார். அதோடு மட்டுமில்லாமல், இறுதியில் மோடியின் இடத்திற்கு சென்று அவரை கட்டியணைக்க, ஆச்சரியத்தில் மோடி சில வினாடிகள் திகைத்துவிட்டு, பின்னர் ராகுலை அழைத்து கைகொடுக்க, அவையே அதிர்ந்துவிட்டது. ராகுல் காந்தியின் இந்த செயல் அனைத்து மக்கள் தரப்பிலும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்கள், நியூஸ் சேனல் என அனைத்திலும் விமர்சிக்கப்பட்டது. பின்னர் மோடியும் ராகுலுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இறுதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக சிவசேனா கட்சி தனது கருத்தை தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி சிறப்பாக பேசியதன் மூலம், அவர் உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து பட்டம் பெற்றுவிட்டார்.  அவர் மோடியை கட்டியணைக்கவில்லை. மோடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். இது போன்று பல்வேறு அதிர்ச்சிகள் அரங்கேறலாம்" என்றார்.

முன்னதாக நேற்று கூட்டத்தொடரில், சிவசேனா கட்சி எம்.பிக்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close