மூக்குடைபட்ட எதிர்கட்சிகள் : எச்.ராஜா ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 10:29 am

h-raja-tweet-about-bjp-wins-in-trust-vote

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததையொட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், " மூக்குடைபட்ட எதிர்கட்சிகள்" என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களைவையில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. விவாதத்தை தொடங்கி வைக்க, அடுத்ததாக ராகுல் காந்தி உரையில் நாடாளுமன்றமே நேற்று கலகலப்பானது. அவர் பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமல்லாமல், அவருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி இறுதியில் மோடியின் இடத்திற்கு சென்று அவரை கட்டியணைக்க, ராகுலை அழைத்து மோடி கைகொடுக்க அவையே அதிர்ந்துவிட்டது.

பின்னர் எம்.பிக்கள் தொடர்ந்து பேச, இறுதியில் பிரதமர் மோடி ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நீண்ட உரையை முன்வைத்தார். இறுதியில் இரவு 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்திற்க்கு ஆதரவாக(பா.ஜ.கவுக்கு எதிராக)- 126, தீர்மானத்திற்க்கு எதிராக (பா.ஜ.கவுக்கு ஆதரவாக) -325 பேர் வாக்களித்தனர். தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 

இது தொடர்பாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 எதிராக 325. அதாவது வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 23% நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு. 77% எதிர்ப்பு. இதே நிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும். மூக்குடைபட்ட எதிர்கட்சிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close