2019 தேர்தலுக்கான எதிரொலி தான் இந்த வெற்றி: அமித் ஷா பெருமிதம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2018 10:28 am

victory-of-pm-modi-govt-a-defeat-of-familism-amit-shah

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். அதற்கான எதிரொலி தான் இந்த வெற்றி என பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களைவையில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அவையில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற இறுதியில், இரவு 11 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்திற்க்கு ஆதரவாக(பா.ஜ.கவுக்கு எதிராக)- 126, தீர்மானத்திற்க்கு எதிராக (பா.ஜ.கவுக்கு ஆதரவாக) -325 பேர் வாக்களித்தனர். தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 

இது தொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களவையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.கவின் வெற்றி மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். அதற்கான எதிரொலி தான் இந்த வெற்றி" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "மோடி அரசின் ஜனநாயக வெற்றி இது. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பரம்பரை ஆட்சி நடத்திய காங்கிரஸ் தோற்றுவிட்டது. ஏழைக்குடும்பத்தில் பிறந்து, தற்போது பிரதமராயிருக்கிறார் மோடி. பரம்பரை ஆட்சியில் ஏற்பட்ட மாற்றத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close