ராகுலின் கண்ணை பார்க்காதது ஏன்?- பிரதமர் மோடி பதில்

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jul, 2018 12:38 pm
pm-modi-speech-in-lok-sabha

ஏழை தாயின் மகனான நான் எப்படி ராகுலின் கண்ணை பார்த்து பேச முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி, ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை தருவேன் என்றீர்களே, அந்த பணம் எங்கே? 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னீங்களே என்ன ஆச்சு? என வினவினார். அதன்பின் மோடியால் எனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவர் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது என தொடர்ந்து சாடினார்.

இதையடுத்து ராகுல்காந்திக்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவையில் ராகுல் காந்தி கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது. தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஆர்பிஐ மீது காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை. ஏழைத் தாயின் மகனான நான் எப்படி ராகுலின் கண்ணை பார்த்து பேச முடியும். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை; எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு. நிறைய பேர் பிரதமர் ஆக வேண்டும் என விருப்பப்படுகின்றனர். தான் பிரதமர் ஆகும் கனவை அடைய ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார். அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர்” என பதிலடி கொடுத்தார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close