வாஷிங்டனில் ரத்தான 2+2 பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் ஏற்பாடு

  Padmapriya   | Last Modified : 21 Jul, 2018 06:55 pm

india-is-to-host-us-for-2-2-talks

 இந்தியா - அமெரிக்காவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனை இரு நாட்டுத் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது  இருநாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்த வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த (2+2 பேச்சுவார்த்தை) அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இரு நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை பலமுறை பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. 

இறுதியாக கடந்த 6ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அவசரமாக வடகொரிய பயணம் மேற்கொண்டதால், மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டது. 

இதற்கிடையில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையும் விதித்தது. அத்துடன் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என்று இந்தியா உட்பட நட்பு நாடுகளை வலியுறுத்தியது. இந்த விவகாரம் தான் பேச்சுவார்த்தை ரத்தானதுக்கு காரணம் என்று பேசபட்டது. 

இடையே, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ரஷ்யா - அமெரிக்கா இடையே உறவு மோசமாக உள்ள நிலையில், இந்தியாவின் நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய - அமெரிக்க அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது. 

இந்த 2+2 சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ ஒத்துறைப்பு, பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேசு வார்கள். அதேபோல், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சந்தித்து பேசுவார்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.