எம்.பி.பி.எஸ் படிக்க செல்லும் குப்பை அள்ளும் தொழிலாளியின் மகன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jul, 2018 06:57 pm
rag-picker-s-son-battles-hardship-gets-mbbs-admission-in-aiims

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குப்பை அள்ளும் தொழிலாளியின் மகனுக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தீவாஸ் என்ற பகுதியைச் சேர்ந்த ரஞ்ஜித் சவுத்ரி என்பவர் குப்பை அள்ளும் தொழிலை செய்துவருகிறார். அவரது மகன் ஆஷ்ரம் சவுத்ரிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ்-ல் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக நடைப்பெறும் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் ஆஷ்ரம் சவுத்ரி தேசிய அளவில் 707வது இடம் பிடித்துள்ளார். இதேபோல் நீட் தேர்விலும் ஆஷ்ரம் வெற்றிப்பெற்றுள்ளார். 

இதுகுறித்து ஆஷ்ரம் சவுத்ரி கூறுகையில், வறுமையின் பின்னணியில் இருக்கும் எனக்கு உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆஷ்ரம் சவுத்ரி நன்றி. என்னுடைய வீட்டின் நிலையும், வாழும் சூழ்நிலையும் என் படிப்பை பாதித்தது இல்லை. மருத்துவர்கள் இல்லாத தனது கிராம மக்களுக்காக சேவை செய்வதே லட்சியம் என ஆஷ்ரம் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புத்தகம் கூட வாங்க முடியாத ஏழ்மையான நிலையிலும், பல்வேறு அமைப்புகளின் உதவியால் கடுமையாக படித்து வறுமைக்கு கல்வி தடையில்லை என்பதை உணர்த்திய இந்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close