கட்டிப்பிடித்த ராகுல்! பிரதமரின் உடலில் விஷ ஊசி?- சுப்பிரமணியன் சுவாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jul, 2018 07:10 pm

subramanian-swamy-tweet-about-rahul-gandhi-s-hug-to-pm-modi

ராகுல் கட்டிபிடித்ததன் பின்னணியில் பிரதமரின் உடலில் விஷ ஊசி செலுத்தியிருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நேற்று மக்களவையில் கொண்டுவந்தது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமரை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு பேச்சின் நிறைவில் பிரதமர் மோடியை கட்டியணைத்தார். பதிலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியை அழைத்து சிரித்தப்படி கைக் குலுக்கி தட்டிக்கொடுத்தார். இந்த நிகழ்வு அவையில் பெரும் நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்கை பிரதமர் மோடி அனுமதித்திருக்க கூடாது. ரஷ்யர்களும், கொரியர்களும் எதிரிகளை வீழ்த்த அவர்கள் மீது விஷ ஊசியை செலுத்த இதுபோன்று கட்டிப்பிடிப்பதுண்டு. இதனால் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, சுனந்தா புஷ்கர் கையில் இருந்ததுபோல தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close