தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பு மட்டுமே- ராகுல் காந்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jul, 2018 07:13 pm
rahul-gandhi-tweet-about-the-point-of-yesterday-s-debate-in-parliament

தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும் இரக்கமும்தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதித்த ராகுல்காந்தி, தனது பேச்சை முடித்த பின்னர்,  பிரதமர் மோடியை கட்டியணைத்தார். பதிலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியை அழைத்து சிரித்தப்படி கைக் குலுக்கி தட்டிக்கொடுத்தார். என்னதான் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் நம் இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய சபை நாகரிகம் அனைவரையும் அதிர்ச்சியில் உரைய வைத்தது. ஆனால் பாஜகவினர் ராகுல் காந்தி மீது பல எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தனது பேச்சின் மூலம் மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார். தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும் இரக்கமும்தான்! அன்பு ஒன்றே நாட்டை கட்டமைக்கும் வழி என்பதை நாம் நிரூபிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close