ஜிஎஸ்டி வரிகளில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு!

  Newstm News Desk   | Last Modified : 22 Jul, 2018 09:01 am

no-tax-to-be-levied-on-sanitary-napkins

தொடர் எதிர்ப்புகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் விலக்கு அளித்துள்ளது. 

2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. குழுவின் 28வது குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநில பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

முன்னதாக பெண்களுக்கான அத்தியாவசிய பொருளான மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீததம் வரிவிதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்றைய கூட்டத்தின் போது நாப்கின்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், துணி துவைக்கும் இயந்திரம், குளிா்சாதன பெட்டி, பேட்டரி, வேக்கம் கிளீனா், கிரைண்டனா், மிக்சி, ஹோ் டிரையா், பெய்ண்ட், வாசனை திரவியம் உள்ளிட்டவை மீது 28 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நகைப்பெட்டி, மரப்பெட்டி, அலங்கார கண்ணாடி உள்ளிட்டவை மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற 27ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சா் பியூஷ் கோயல் தொிவித்துள்ளா்ா. 

இதே போன்று 5 கோடி வரை வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகா்கள் மாதம் தோறும் வரி கட்ட வேண்டும். அஸ்சாம், அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சல், ஹிமாலயா, சிக்கிம் ஆகிய மாநில வணிகா்களுக்கு ரூ.10 லட்சமாக இருந்த வரிச்சலுகை ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சா் பியூஷ் கோயல் அறிவித்துள்ளாா்.  அடுத்தபடியாக வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தின் சிறப்பு கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தின் போது சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் குறித்து விவாதிக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. 

சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு  சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் வரவேற்பு அளித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close