பசு பாதுகாவலர்கள் மீண்டும் அட்டூழியம்; ஒருவர் கொலை!

  shriram   | Last Modified : 22 Jul, 2018 05:58 pm
one-killed-in-cow-vigilantes-attack-in-rajasthan

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், பசு பாதுகாப்பு அமைப்பினர் இரண்டு இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், பசு பாதுகாப்பு அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துவிட்டன. மாட்டுக்கறி விற்பதாக குற்றம்சாட்டப்பட்டு, இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதும், சில நேரம் கொல்லப்படும் சம்பவங்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் கூட இதுகுறித்து விவாதங்கள் சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், ராஜஸ்தானின் அல்வாரில் கடந்த வெள்ளியன்று மற்றொரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 31 வயதான அக்பர் கான் மற்றும் அவரது நண்பர், இரண்டு பசுக்களோடு நடந்து வந்து கொண்டிருந்த போது, 8-10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சூழ்ந்து, தாக்கியுள்ளது. பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், மாடுகளை அவர்கள் திருடி வந்துள்ளதாக குற்றம் சாட்டியதாக, மரண படுக்கையில் போலீசாரிடம் கான் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே கடும் கண்டனம் விடுத்துள்ளார். தாக்குதல் நடந்த கிராமத்தில் உள்ள இரண்டு பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், இதே அல்வாரில் 55 வயதான பால் வியாபாரி பெஹுலு கான் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பார்ப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close