பிரதமர் மோடி தான் நமக்கெல்லாம் அம்மா : தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:39 am
modi-is-the-amma-of-india-tamilisai

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், இந்தியாவுக்கே இப்போது அம்மாவாக விளங்குவது பிரதமர் மோடி தான் என பேசினார். 

மதுரையில் நடந்த பா.ஜ.க மகளிரணி விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என அழைத்தார்கள். அவர் இறந்தபிறகு, யார் அவரது இடத்தில் அம்மாவாக இருக்கப் போகிறார் என பலர் கேள்வி எழுப்பினார்கள். நான் சொல்லுகிறேன், தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே அம்மாவாக இருந்து செயல்படுபவர் பிரதமர் மோடி தான்" என்றார்.

சென்னையில், மனநலம் குன்றிய சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவதை சுட்டிக் காட்டிய அவர், இதுபோன்ற குற்றவாளிகள் கடந்த ஆட்சியில் தப்பித்து வந்ததாவும், பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா அரசில் நடத்தப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு, தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் என பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close