கட்சியை பலவீனப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: ராகுல் காந்தி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 08:21 am
will-act-against-leaders-who-weaken-congress-s-fight-rahul-gandhi

டெல்லி: கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என ராகுல் காந்தி எச்சரரித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவது, மக்களவைத் தேர்தலில் வியூகம், பா.ஜ.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது.  காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் காரிய கமிட்டி கூட்டம் இதுவாகும். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேசுகையில், மக்களவையில், அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்த விதத்தை வைத்துப் பார்க்கும்போது, மத்திய அரசு அகற்றப்படுவதற்கான கவுண்ட் டவுன் போல் அமைந்து விட்டது எனக் குறிப்பிட்டார். மேலும் பிற கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய தேர்தல் கூட்டணி காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.கவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். கட்சியில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது எனக் குறிப்பிட்ட ராகுல்காந்தி, அதே நேரம் தவறான தகவல்களை கூறி தமது போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் தலைவர்கள் மீது தாம் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close