பெண்களுக்கே பாதுகாப்பில்லை..பா.ஜ.கவினர் மாடுகளை பாதுகாக்கிறார்கள்: உதவ் தாக்ரே

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:31 pm
bjp-is-busy-protection-cows-uddhav-thackeray-slams-ruling-partu

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் பா.ஜ.க, மாடுகளை பாதுகாப்பதில் பிசியாக இருக்கிறது என்று சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்ரே குற்றம்சாட்டி உள்ளார். 

கடந்த வெள்ளியன்று நடந்த மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றது. இருந்தும் மகாராஷ்டிராவில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கட்சி அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

பா.ஜ.க தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்ட போதும் சிவசேனா தரப்பில் இருந்து ஆதரவு தரப்படவில்லை என்பது மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கட்சி உறுப்பினர்களை நேற்று சந்தித்த அமித்ஷா, மகாராஷ்டிர மாநிலத்தில் தனித்து போட்டியிட உள்ளதாகவும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க- சிவசேனா கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அறிவிப்பு வந்த அடுத்த நாளே குற்றச்சாட்டுகள் கூற தொடங்கி விட்டார் சிவசேனா கட்சியின் தலைவர் உதவ் தாக்ரே. 

நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 3-4 ஆண்டுகளாக நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் இந்துத்துவா கொள்கை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களை பொறுத்தவரை அது சரியான இந்துத்துவா கொள்கையே இல்லை. நம் நாட்டில் பொண்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஆனால் பா.ஜ.கவினர், மாடுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது" என்றார். 

source: www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close