ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு: கைதாவதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்கும் ப.சிதம்பரம்!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:30 pm

p-chidambaram-moves-anticipatory-bail-plea-in-delhi-s-patiala-house-court-in-aircel-maxis-case

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் துணைகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2006ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ -யின் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ கடந்த 2014ம் ஆண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, மேலும் சில ஆதாரங்களை சேர்த்து கடந்த 19ம் தேதியன்று சிபிஐ துணைகுற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து, கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஜூலை 31ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close