கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:27 pm

inx-media-case-supreme-court-allows-karti-chidambaram-to-travel-to-usa

வர்த்தகம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சிபிஐ அதிகாரிகளால், கார்த்தி சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து சிபிஐ காவல் விசாரணை நடைபெற்றது. இறுதியாக  நீதிமன்றக்காவலில் இருந்த அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதேபோன்று ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தியை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இந்தூர் மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இன்று(ஜூலை 23) முதல் ஜூலை 31ம் தேதி வரை அவர் வெளிநாடு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் தொடர்பாக அவர் பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் செல்ல இருக்கிறார். 

முன்னதாக மே.19 முதல் மே 27ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. தனது மகளின்படிப்புக்காக  கடந்த டிசம்பர் மாதம் வெளிநாடு சென்றார். இன்று மூன்றாவது முறையாக கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

source: www.newstm.in

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close