நாடாளுமன்றத்தில் வேவு பார்க்கிறார்கள்: மல்லிகார்ஜுன் கார்கே 

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 06:12 pm
congress-leader-mallikarjun-kharge-accuses-spying-in-parliament

நாடாளுமன்றத்தில் அலுவலர்கள் சிலர் வேவு பார்ப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

பரபரப்பான சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போல பா.ஜ.கவே வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதில் பேசிய காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "நாடாளுமன்றத்தின் கேலரி பகுதியில் இருந்து ஒரு அலுவலர் நாடாளுமன்ற செயல்பாடுகளை குறிப்பெடுத்துக்கொண்டே இருக்கிறார். அது எங்களை வேவு பார்ப்பது போல இருக்கிறது" என்றார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சியினர், "குறிப்பெடுப்பது அவர்களின் வேலை, அதை தான் செய்கிறார்கள்" என்றார்கள். பின்னர், இதுகுறித்து கவனித்து நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன், "நாட்டில் மாடுகளை பாதுகாக்க பல வன்முறைகள் நடக்கிறது. இதுபோன்ற செயல்களை அரசு ஊக்கவித்து வருகிறது. அரசுக்கு நாட்டின் வளர்ச்சியின் மேல் ஈடுபாடே இல்லை" என்றார். 

Source: newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close