பெண்கள் காப்பகத்தில் 30 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! பகீர் பின்னணி

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Jul, 2018 09:51 pm

to-find-buried-body-police-dig-up-bihar-shelter-home-where-over-30-girls-were-allegedly-raped

பீகாரில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் பெண்கள் காப்பகத்தில் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் இயங்கும் பெண்கள் காப்பகத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர். அவர்களில் 7 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 30 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் ஒரு பெண் அடித்து கொல்லப்பட்டதாக அக்காப்பகத்தில் வசிக்கும் பெண்கள் அளித்த புகார் மூலம் தெரியவந்துள்ளது. 

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளனர். அந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. விசாரணையில் 11 காப்பக ஊழியர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆதரவு அளிக்காததால் பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்யப்பட்டு, காப்பக வளாகத்தில் புதைத்துள்ளனர். அப்பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்தக் காப்பகம் மூடப்பட்டு, அங்கிருந்த சிறுமிகள் அனைவரும் பாட்னா, மதுபாணி, மோகமா ஆகிய இடங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 நபர்களில் ஒருவர் அம்மாவட்ட நிர்வாகி ஆவார். அவரது ஆதரவில்தான் இத்தகைய குற்றங்கள் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close