பசுவுக்கு இருக்கும் பாதுகாப்பு முஸ்லீம்களுக்கு இல்லை- சசிதரூர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jul, 2018 05:47 am

safer-to-be-a-cow-than-a-muslim-shashi-tharoor

நாட்டில் ஒரு பசுவுக்கு இருக்கும் பாதுகாப்பு முஸ்லீம்களுக்கு இல்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவிகளை கொல்லும் நிகழ்வு சமீபகாலமாக அரங்கேறி வருகிறது. இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தது. எனினும் வடமாநிலங்களில் இந்த தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த அளவிற்கு பசுக்களுக்கு முக்கியத்துவமும், பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. கடந்த வாரம் ராஜஸ்தானில் விவசாயி ரஃபர் என்பவர் பசுமாடு வாங்கிகொண்டு வீட்டிற்கு நடந்துவந்து கொண்டிருக்கும்போது பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.

இதனை கண்டிக்கும் விதமாக சசிதரூர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அதுபோன்ற சூழல் இந்தியாவில் இல்லை. இங்கு பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு முஸ்லீம்களுக்கு இல்லை” என பதிவிட்டுள்ளார். 

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பசு பாதுகாவலர்களால் நாடு முழுவதும் 389 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close