மோடியின் கனவுக்காக போராட முடியாது- உத்தவ் தாக்ரே

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jul, 2018 06:12 am

shiv-sena-not-fighting-for-pm-modi-s-dream-uddhav-thackeray-hits-back-at-bjp

சாமானிய மக்களின் கனவுக்காகதான் பாடுபடுகிறோமே தவிர, மோடியின் கனவுக்காக இல்லை என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். 

கடந்த வெள்ளியன்று நடந்த மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மகாராஷ்டிராவில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கட்சி பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்ட போதும் சிவசேனா தரப்பில் இருந்து பாஜகவுக்கு ஆதரவு தரப்படவில்லை என கூறப்படுகிறது. 
 
2019 லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகும்படி மகாராஷ்டிரா மாநில பாஜக தொண்டர்களை அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா அழைப்புவிடுத்திருந்த நிலையில் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சிவசேனா கட்சி குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, “நாங்கள் சாமானிய மனிதனின் கனவுக்காகதான் பாடுபடுகிறோமே தவிர, மோடியின் கனவுக்காக இல்லை. மக்களை நாங்கள் நண்பர்களாக பார்க்கிறோம். இனி அவர்களுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம். யார் தோள் மீதும் ஏறிக் கொண்டு நாங்கள் தாக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close