இரக்கமற்ற இந்தியாவே மோடியின் ‘புதிய இந்தியா’- ராகுல் காந்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jul, 2018 05:26 am
this-is-modi-s-brutal-new-india-rahul-gandhi-on-alwar-lynching-incident

மனித நேயத்திற்கு பதிலாக வெறுப்புணர்வால் உருவானதுதான் மோடியின் புதிய இந்தியா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

கடந்த வாரம் ராஜஸ்தானில் விவசாயி ரஃபர் என்பவர் பசுமாடு வாங்கிகொண்டு வீட்டிற்கு நடந்துவந்து கொண்டிருக்கும்போது பசுவை கடத்தியதாக பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினருக்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரஃபரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். செல்லும் வழியில் உயிருக்கு போராடும் ரஃபரை பெரிதுபடுத்தாமல், டீ குடித்துவிட்டு பொறுமையாக மருத்துவமனை சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துவர தாமதமானதால் ரஃபர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலர்களின் அலட்சியத்தால் விவசாயி கொல்லப்பட்ட சம்பவர் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “ராஜஸ்தானில் மருத்துமனை 6 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், காவலர்கள் 3 மணி நேரம் கழித்து விவசாயி ரஃபரை அழைத்து சென்றது ஏன்? உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் விவசாயியை காப்பாற்றும் நேரத்தில் டீ பிரேக் அவசியமா? இது தான் மோடியின்  மனித நேயமற்ற வெறுப்புணர்வால் உருவாக்கப்பட்ட‘புதிய இந்தியா’” என பதிவிட்டுள்ளார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close