ராஜஸ்தான் கொடூரம்: தாக்குதல் நடத்திய பசு காவலர்கள் ; டீ குடித்த போலீசார்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 06:14 am

cow-vigilantes-attack-police-delay-the-reason-for-victim-s-death

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், சில தினங்களுக்கு முன் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பல் தாக்கியதில் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறையினரின் அலட்சியத்தாலேயே, தாக்கப்பட்ட ரஃபர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த வெள்ளியன்று, அல்வார் பகுதியில், இரண்டு பசுக்களுடன் வந்துகொண்டிருந்த ரஃபர் மற்றும் அவரது நண்பர் அஸ்லான், பசு பாதுகாப்பு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். அஸ்லான் அங்கிருந்து தப்பிச் செல்ல, ரஃபர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம், மீண்டும் பசு பாதுகாப்பு அமைப்பினருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பை கிளப்பியது. 

இந்நிலையில், மருத்துவமனையில் ரஃபரை அனுமதிப்பதில் போலீசார் தாமதம் ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் ரஃபரை கொண்டு சென்று அனுமதிக்க 3 மணி நேரம் ஆனதாக தெரிகிறது. மேலும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், வண்டியை நிறுத்தி, போலீசார் டீ சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க, ராஜஸ்தான் போலீஸ் சார்பில் உயர்மட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close