சர்ச்சைக்குரிய வாட்ஸ்ஆப் பதிவு; அட்மினுக்கு பதில் சிக்கிய அப்பாவி!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 06:13 am

whatsapp-post-controversy-default-admin-spends-5-months-in-jail

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் சர்ச்சைக்குரிய பதிவிட்டபோது அட்மினாக இருந்ததற்காக கடந்த 5 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த பதிவின் போது அவர் அட்மினே இல்லையென அவரது தரப்பு தெரிவித்துள்ளது. 

ஜுனைத் கான் என்ற 21 வயது இளைஞர் கடந்த பிப்ரவரி மாதம், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வாட்ஸ்ஆப் தளத்தில் பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அவர் அந்த குருப்பின் அட்மின் என போலீசார் குற்றம் சாட்டியிருத்தனர். கடந்த 5 மாதங்களாக அவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த கருத்து பதிவு செய்யப்பட்ட போது, கான் அந்த குருப்பின் அட்மினே இல்லையென அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த குருப்பின் அட்மினாக இருந்த நபர், குரூப்பை விட்டு வெளியேறியதால், வாட்ஸ்ஆப் விதிகளின் படி, அந்த குரூப்பில் ஒருவரான ஜுனைத் கான் தானாகவே அட்மினாக ஆக்கப்பட்டார் என அவரது உறவினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய பிரதேசத்தின் பச்சோரே காவல்நிலைய அதிகாரி யுவராஜ் சிங் பேசியபோது, "எங்களிடம் இருந்த தகவல்களையும் ஆதாரங்களையும் வைத்து நாங்கள் வழக்கை அன்று பதிவு செய்தோம். அப்போது அவர் தானாகவே அட்மின் ஆக்கப்பட்டார் என அவரது தரப்பில் இருந்து கூறப்படவில்லை. மேலும் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் அதை அவர்கள் பதிவு செய்ய வேண்டும்" என கூறுகிறார். 

 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close