ராகுல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் ஆதரிப்பேன்: தேவகவுடா

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 11:07 am

h-d-deve-gowda-backs-rahul-gandhi-for-pm

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் ஆதரவு தெரிவிப்பேன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கர்நாடக  சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம்  கிடைக்கவில்லை. ம.ஜ.த 38 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், 79  தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக காங்கிரஸ் இருக்கும்போது, மதவாத  சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தக்கூடாது என்ற நோக்கத்தில் ம.ஜ.த  தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை ராகுல்காந்தி எடுத்தார். 

அவரின்  தொலைநோக்கு பார்வை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முதிர்ச்சியடைந்த  தலைவர்கள் எடுக்கும் ராஜதந்திர முடிவை ராகுல்காந்தி எடுத்தார். கர்நாடக சட்டசபையில் தற்போது அமைந்துள்ள கூட்டணி அடுத்தாண்டு நடக்கும்  மக்களவை தேர்தலிலும் தொடரும். தேசியளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு  முதல் முறையாக ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அவரை பிரதமர் வேட்பாளராக  முன்னிலைப்படுத்தினால் ம.ஜ.த மனப்பூர்வமாக ஆதரவு கொடுக்கும்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close