பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 12:37 pm

congress-plans-privilege-move-against-pm-modi-nirmala-sitharaman

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை கூறியதாக பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 20ம் தேதி காங்கிரஸ், தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதை ராகுல் காந்தி பேசும்போது, "பிரான்சிடம் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்து கொண்ட ஒப்பந்தம் உண்மையானது அல்ல. பிரான்ஸ் அதிபரிடம் நான் தொடர்பு கொண்டு பேசும்போது, அவர் இம்மாதிரியான ஒரு ஒப்பந்தம் போடவில்லை என்று கூறுகிறார். பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, கொறடா அனுராக் தாகூர், துஷ்யந்த் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் ராகுல் காந்தி மீதான உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அளித்தனர். இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, இந்த நோட்டீஸ் தொடர்பாக பா.ஜ.க எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த சபாநாயகர், "உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக விசாரணை செய்யப்படும்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸும்  பா.ஜ.க மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மக்களிடம் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றியதாக பிரதமர் மோடி,அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், உரிமை மீறல் நோட்டீஸ் விரைவில் கொடுக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close