பால் விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் கோமியம்

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 05:10 pm

cow-urine-price-touches-milk-rate-in-rajasthan

ராஜஸ்தானில் பால் விலையை விட கோமியம் அதிகமான விலைக்கு விற்பனையாகி வருகிறது. 

கோமியத்தில் பல மருத்துவ குணங்கள் இருப்பதும், விவசாயத்திற்கு பூச்சிக்கொள்ளியாக பயன்படுத்தலாம் என்பதும் முன்பே அறிந்தது தான். ஆனால் சமீபகாலமாக இதுப்பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. இதனால் கோமியத்தின் தேவை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக வடக்கில் கோமியத்திற்கான மவுசு அமோகமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மாடு பண்ணை வைத்திருப்பவர்கள் பாலை விட கோமியத்தின் மூலம் அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.22 மற்றம் ரூ 25க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால் கோமியத்தின் விலை ரூ.30ஐ தாண்டியுள்ளது. 

குறிப்பாக கிர் மற்றும் தர்பர்கர் இனத்தை சேர்ந்த மாடுகளின் கோமியத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் வருமானம் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

மேலும் விற்பனையாளர்களுக்கு ரூ.15-30 வரை பண்ணையாளர்கள் மாட்டு கோமியத்தை விற்பனை செய்கின்றனர். அவை கடைகளில் ரூ.30-50க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயம், மருத்துவம் போன்றவற்றிற்காக அதிகமானோர் கோமித்தின் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. 

உதய்பூரில் இருக்கும் மஹாரான பிரதாப் விவசாய பல்கலைகழகம் ஒவ்வொரு மாதமும் 300 முதல் 500 லிட்டர் கோமியத்தை வாங்குகிறது. அதன் விலை ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close