சிறுமிகள் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் புதிய மசோதா!

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 06:17 pm
bill-for-strict-punishment-in-rape-cases-introduced-in-lok-sabha

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்தியாவில் குழந்தைகள், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபமாக காஷ்மீரில் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று  உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது என தொடர்ந்து வருகின்றன. எனவே தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இது தொடர்பான மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்படும். 16 வயதிற்கு உப்பட்ட சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தண்டனை 10லிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களது குற்றத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சிறுமிகளிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு  ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களில் சிறைத்தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 12 முதல் 16 வயது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close