இந்தியர்களின் கருப்புப்பணம் சுவிஸ் வங்கியிலா?- அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 25 Jul, 2018 01:53 am

80-reduction-in-indian-money-in-swiss-banks-under-modi-government-sources

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய்வது குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். 

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புபணம் பாதுகாப்பாக உள்ளதாகவும், சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் கடந்த 2016 ஆம் ஆண்டை விட தற்போது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ராகுல்காந்தி கூறினார். மேலும் கருப்புப்பணத்தை மீட்கும் முயற்சியில் மோடி அரசு தோல்வி அடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினார். 

இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய நிதியமைச்சர் பியூஷ் கோயல், “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் கருப்புப்பணம் புழக்கம் 80% குறைந்துள்ளது. உண்மை தெரியாமல் பேசுவதையே ராகுல்காந்தி வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்வது 34.5% குறைந்துள்ளது” என விளக்கமளித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close