வழிக்கு வந்தார் மல்லையா! இந்தியாவுக்கு திரும்ப விருப்பம்

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 01:55 am

mallya-indicated-return-to-india

கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பல்வேறு வங்கிகளிடம் ரூ.9000 கோடி அளவில் கடன் பெற்றுவிட்டு, நாட்டை விட்டு தப்பித்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு இந்திய அரசுக்கு சாதகமாக செல்வதாக தெரிகிறது. வழக்கின் அடுத்த அமர்வுக்கு முன்னதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் மல்லையா, தானாகவே இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் நடந்து வரும் வழக்குகளில் முக்கியமாக, மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை முயற்சத்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம்" மூலம் மல்லையாவை தண்டிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டப்படி குற்றம்சட்டப்பட்டுள்ள முதல் நபர் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரூ.12,500 கோடி மதிப்பிலான மல்லையாவின் அசையும், அசையாத சொத்துக்கள், பங்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்திலும் அனுமதி கோரியிருந்ததது. 

இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது கடும் நெருக்கடியில் உள்ள விஜய் மல்லையா, தானாகவே இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு தரப்பில் இருந்தும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close