பிரதமராக மம்தா, மாயாவதி? வழிவிட ராகுல் தயார்!

  shriram   | Last Modified : 25 Jul, 2018 10:30 am
rahul-gandhi-ready-to-pave-way-for-mamata-or-mayawati-as-pm

பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுள் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2014 நாடாளுமன்ற தேர்தல் படுதோல்விக்கு பிறகு, மாநில அளவில் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களில் தோற்றுள்ளது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாரதிய ஜனதா வேட்பாளர்கள் தோல்வியடைந்து வருவதால், காங்கிரஸின் எழுச்சி மீண்டும் சாத்தியமாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியால் மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்க முடியுமா என்ற கேள்வி உள்ள நிலையில்,  தன்னை மோடிக்கு இணையான தலைவராக காட்டிக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் நிற்பார் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், குறுகிய காலத்தில் ராகுல் மீதான மக்கள் நம்பிக்கையை மாற்ற முடியுமா என்ற சந்தேகமும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இருந்ததாக தெரிகிறது. 2019 தேர்தலில், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் மாபெரும் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இந்த கூட்டணி அமையும் பட்சத்தில், மம்தா பேனர்ஜி அல்லது மாயாவதி ஆகியோர் பிரதமர் வேட்பாளராக நிற்க முன்வந்தால், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் வேட்பாளர் பிரதமராவதை தடுக்கவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close