குஜராத் கலவர வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 01:58 pm
hardik-patel-jailed-for-2-years-for-violence-during-2015-patidar-agitation

குஜராத் கலவர வழக்கில் பட்டேல் சமுதாயத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து விஸ்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குஜராத்தில் பட்டேல்  சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹர்திக் பட்டேல் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. நூற்றுக்கணக்கான பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், வன்முறையில் பா.ஜ.க எம்.எல்.ஏ ருஷிகேஷ் அலுவலகம் சூறையாடப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில், குஜராத் விஸ்நகர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஹர்திக் பட்டேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் லால்ஜி படேல், ஏ.கே.படேல் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மூவருக்கும் தலா ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close