பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் முடிவு!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2018 07:51 pm
tdp-moves-privilege-motion-against-pm-modi-for-lying-on-andhra-special-status-in-house

பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறி இதுவரை மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை எனக்கூறி ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இருப்பினும், பாஜகவுக்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. 

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், "ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். மேலும் உரையின் இறுதியில், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டியணைக்க, மோடி பதிலுக்கு கை குலுக்கினார். இதையடுத்து, ராகுல் காந்தி மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதேபோல, ரஃபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தது. 

இதைத்தொடர்ந்து மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பல்வேறு முறைகளில் தெலுங்கு தேசம் வலியுறுத்தியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசின் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர தனது கட்சி எம்.பிக்களிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close