கார்கில் நாளன்றும் பலத்தை காட்டிய இந்திய ராணுவம்... காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 04:42 pm
one-terrorist-killed-in-an-encounter-in-north-kashmir-s-handwara

காஷ்மீர் எல்லையில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினரும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இன்று காஷ்மீர் குப்வாரா மாவட்டம் கந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் உள்நுழைந்தனர். தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரமாக நடந்த தாக்குதலில், இந்திய பாதுகாப்புப்படையினரால் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் இரண்டு தீவிரவாதிகளை வீழ்த்தும் நோக்கில் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று கார்கில் போரின் 19ம் ஆண்டு நினைவு தினம். இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே தெரிந்துகொண்ட நாள். காஷ்மீரில் கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலை முறியடித்து இன்றும் ராணுவ வலிமையை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளனர் நமது இந்திய ராணுவ வீரர்கள்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close