இனி மேற்கு வங்கத்தின் பெயர் 'பங்களா'- பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் 

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 03:49 am

west-bengal-to-bangla-state-approves-name-change

மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்களா' என மாற்றுவதற்கான தீர்மானம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவையில் நிறைவேறியது. தொடர்ந்து இந்த தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மேற்குவங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் தனிநாடாக பங்களாதேஷ் என மாறியது.

வங்காள மாநிலத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்தார். குறிப்பாக ஆங்கில மொழியாக்கத்தில் 'வெஸ்ட் பெங்கால்' என அசிக்கப்படுவதாக், மாநிலங்களின் பட்டியலில் இது கடைசி இடத்தில் வரிசைப்படுத்தப்படுகிறது. 

இது தொடர்பான மாற்றத்துக்கு  2011ஆம் ஆண்டு 'பச்சிம் பங்கா' என பெயர் மாற்றம் செய்தார். ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பின், பங்களா என்று ஆங்கிலத்திலும் 'பெங்கால்' என்று இந்தியிலும் அழைக்க பரிந்துரை செய்தார். இது குறித்து மத்திய அரசு ஒப்புதல் வசங்கவில்லை. 

இந்த நிலையில், அம்மாநிலத்தின் பெயரை 'பங்களா' என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்து, இதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து இந்த தீர்மானம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, பின் மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close