கிராமப்புறங்களில் நீட் தேர்வு இலவச ஆன்லைன் பயிற்சி: மக்களவையில் தகவல்!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 05:15 pm
neet-exam-to-be-in-online-mode-and-free-coaching-given-to-rural-students

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு ஆன்லைனில் தான் நடைபெறும் எனவும், இது தொடர்பாக கிராமப்புற மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் தகவல் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு இனி வரும் ஆண்டுகளில் பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். அதே போன்று நீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் பிற போட்டித் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தாது. அதற்கு பதிலாக தேசிய தேர்வுகள் முகமை(National Testing Agency) நடத்தும். அனைத்து தேர்வுகளும் கணினியில் ஆன்லைனில் தான் நடத்தப்படும் என கூறியிருந்தார். 

இது தொடர்பாக இன்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது.விவாதத்தின் போது, மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங் கூறுகையில், "வரும் ஆண்டுகளில் நீட் தேர்வு ஆன்லைனில் தான் நடைபெறும். இதற்கு அரசும் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருடத்திற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு இது தொடர்பாக இலவச பயிற்சி அளிக்கப்படும். அதாவது கிராமப்புற பகுதிகளில் கணினி வசதியுள்ள கல்லூரிகளில் அனுமதி பெறப்படும். அங்கு சென்று மாணவர்கள் இலவசமாக நீட் ஆன்லைன் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close