பசிக் கொடுமை: டெல்லியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மரணம் 

  Padmapriya   | Last Modified : 26 Jul, 2018 06:59 pm

3-sisters-found-dead-in-delhi-autopsies-suggest-they-died-of-hunger

டெல்லியின் மந்தாவாலி பகுதியில் பசிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடுஞ் சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது. 

டெல்லியின் மந்தாவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 8 வயது, 4 வயது, 2 வயதுடைய ஓரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் உடல்நலக்குறைவுடன் கொண்டுவரப்பட்டனர். சந்தேகத்தின் பெயரில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறுமிகளின் உடல்கள் கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 

உடற்கூறு அறிக்கையில், 3 சிறுமிகள் வயிற்றிலும் உணவே இல்லை. அவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். மற்றபடி, உடல் உள்ளுறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை. சரியான உணவு உண்ணாமல் பட்டினியால் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர். 

இது குறித்து டெல்லி கிழக்கு போலீஸ் துணைஆணையர் விசாரணை நடத்தி கூறுகையில், 

இறந்துபோன 3 சிறுமிகளும் சகோதரிகள். சிறுமிகளின் வயிற்றில் எந்தவிதமான உணவும் இல்லை, முறையான உணவு இல்லாமல், பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் தங்களது தாய் தந்தையுடன் உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்தனர். கடந்த வாரத்தில் இவர்களது தந்தையின் ஆட்டோ திருடுபோய்விட்டது. இதனால், வேலையில்லாமல் அவர் அலைந்து திரிந்துள்ளார். அந்தச் சம்பவம் முதல் அவரை காணவில்லை. எனவே தான் இவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

அவர்களின் தாயிடம் விசாரணை நடத்திய போது, இறுதியாக கடந்த திங்கள்கிழமை சிறுமிகள் 3 பேரும் உணவு சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார். சிறுமிகள் இறந்தது ஏன் என்பது கூட அவருக்கு சரியாக தெரியவில்லை. 

அவர்கள் தங்கிய வீட்டில் சில மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அது குறித்து விசாரிக்கையில், சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்ததால் அந்த மாத்திரையை கொடுத்ததாக கூறியுள்ளனர்.  சமீபத்தில் தான் இவர்கள் இந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். எனவே அக்கம் பக்கத்தினரிடமும் எதுவும் பேசவில்லை. 

மருத்துவர்கள்நடத்திய உடற்கூறு ஆய்வில் அந்தச் சிறுமிகள் 3 பேரும் பலநாட்கள் சாப்பிடாமல், உணவு இல்லாமல்பட்டினியால் இறந்துள்ளனர் என ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மாத்திரைகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று போலீஸ் துணை ஆணையர் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் பசிக் கொடுமையால் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரையும் உலுக்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close