வருமான வரிக்கான கெடு நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 10:13 am

it-returns-deadline-extended

2018-19ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய விடுக்கப்பட்ட கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தணிக்கை தேவைப்படாத வரி செலுத்தும் பிரிவினருக்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் புதிய வருமான வரி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் 31ம் தேதி வரை, தணிக்கை தேவைப்படாத வரி செலுத்தும் பிரிவினருக்கான கெடு விதிக்கப்பட்டது. தற்போது அதை மேலும் ஒரு மாதம் நீட்டித்து, ஆகஸ்ட் 31 என குறிப்பிட்டுள்ளனர். 

2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிதி சட்டத் திருத்தத்தின் படி, ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்வோருக்கு ரூ.5000 கட்டணமாகவும், டிசம்பர் 31க்கு பிறகு தாக்கல் செய்வோருக்கு ரூ.10,000 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிகிறது. ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், கட்டணமாக ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்படுமாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.