அமைச்சராக இருந்திருந்தால் அறிவுஜீவிகளை சுட உத்தரவிட்டிருப்பேன்: பா.ஜ.க தலைவர்

  Newstm News Desk   | Last Modified : 27 Jul, 2018 08:34 am

would-have-ordered-shooting-of-intellectuals-had-i-been-home-minister-says-karnataka-bjp-leader

தாம் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் நம் நாட்டில் உள்ள அறிவுஜீவகளை சுட்டுத்தள்ள உத்தரவிட்ருப்பேன் என பா.ஜ.க தலைவர் பசனகவுடா பாட்டில் யெட்னல் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் விஜயபுரா சட்டமன்ற தொகுதியில் நேற்று கார்கில் போர் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் மூத்த தலைவரும் அந்த பகுதி எம்.எல்.ஏவுமான பசனகவுடா பாட்டில் யெட்னல் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், "இந்த நாட்டில் வாழும் அறிவுஜீவிகள் நாம் வரிக் கட்டும் பணத்தில் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். பின் அவர்களே நம் இந்திய ராணுவத்திற்கு எதிராக கோஷங்களையும் எழுப்புகின்றனர். மற்ற எந்த காரணத்தையும் விட, நமது நாடு இது போன்ற அறிவுஜீவிகள் மற்றும் தாராளவாதிகளால் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் நம் நாட்டில் உள்ள அறிஜீவிகளை சுட்டுத்தள்ள உத்தரவிட்டிருப்பேன்" என்றார். அவரது இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இவர் சில தினங்களுக்கு முன்பு, "முஸ்லிம்களுக்கு, பா.ஜ.க உறுப்பினர்கள் எந்த விதத்திலும் உதவி செய்ய கூடாது" என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close