கருணாநிதி சிகிச்சைக்கு தேவையான உதவியளிக்க தயார்: மோடி ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 11:27 am

pm-modi-tweets-about-dmk-chief-health

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிகிச்சைக்கு தேவையான உதவிகள் அளிக்க தயார் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, உடல் நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு அவரை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று காலையும் கோபாலபுரம் இல்லத்திற்கு பல தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

மேலும் தி.மு.க தொண்டர்களும் கோபாலபுரம் இல்லத்தின் வெளியே கூடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "கருணாநிதியின் உடல்நிலை குறித்து கனிமொழி மற்றும் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். மேலும் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் கூறினேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close