• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

எந்த நிமிடமும் என்னால் முதல்வராக முடியும்: ஹேமமாலினி பேச்சு!

  Newstm News Desk   | Last Modified : 27 Jul, 2018 07:47 pm

i-can-become-chief-minister-in-any-minute-hema-malini

தான் நினைத்தால் எந்த நிமிடமும் தன்னால் முதல்வராக முடியும் என நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் இருக்கும் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய சென்றிருந்தார் பா.ஜ.க எம்.பி ஹேமமாலினி. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, "நான் இந்த நிமிடம் நினைத்தால் கூட உத்திரபிரதேசத்தின் முதல்வராகி விடுவேன். என்னால் அது முடியும்.ஆனால் அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனால் எனது சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். 

மோடியை போன்ற ஒரு பிரதமர் கிடைப்பது கடினம். மற்ற கட்சியின் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால் நாட்டிற்காக யார் உழைக்கிறார்கள் என்பதைதான் நாம் பாரக்க வேண்டும்" என்றார்.  

Advertisement:
[X] Close