நாளை சென்னை வருகிறார் துணை குடியரசு தலைவர்: கருணாநிதியை சந்திக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 01:11 pm
venkaiah-naidu-will-come-to-chennai-tomorrow-to-visit-gopalapuram-house

தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை சென்னை வருகிறார். 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி, உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்துவரும் காவேரி மருத்துவமனை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது. அப்போதில் இருந்து கோபாலபுரம் இல்லத்தின் வெளியே தொண்டர்கள் குவிய தொடங்கினர். மேலும் நேற்று இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில் இன்று காலையும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஆகியோர் ட்விட்டரில் கருணாநிதிக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை சென்னை வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்தித்து அவர் நலம் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close